மீன்பிடித்து கொண்டிருந்தவரின் அருகே துள்ளிக்குதித்த திமிங்கலம்.. பயங்கரமான காட்சி இதோ

Report
1090Shares

மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் அருகில் ராட்சத திமிங்கலம் ஒன்று துள்ளிக்குதித்துள்ள காட்சி வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவின் ஆழ்கடல் பகுதியில் டோக்லஸ் க்ராப்ட் என்ற திமிங்கல ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் படகில் போய் ஹம்பக் வகை திமிங்கலங்களை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு சின்ன மீன்பிடிப்படகில் ஒரே ஒரு மீனவர் வலை விரித்து தன் தேவைக்கு மீன்களை பிடித்துவிட்டு கரை திரும்பி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அந்த மீனவரின் படகில் மிக அருகில் இந்த ஹம்பக் வகை திமிங்கலம் துள்ளிக் குதிக்க அதை திமிங்கல ஆராய்ச்சிக்கு சென்ற டோக்லஸ் க்ராப்ட் தன் கமெராவில் காணொளி பதிவு செய்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அந்த சின்ன படகை திமிங்கலம் சேதப்படுத்தவோ, தட்டிவிடவோ செய்யவில்லை. இதனால் மீனவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததோடு, அச்சப்படாமல் படகை செலுத்தி கரை வந்து சேர்ந்துள்ளார்.

பெரிய கப்பல்களே திமிங்கலத்தால் நிலை குலைந்து விபத்து ஏற்படும் நிலையில், இந்த சிறிய படகில் மீனவர் தப்பியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.