சுஷாந்த் சிங் மரணத்தில் புதிய திருப்பமா?.. சிபிஐ விசாரணையின் அதிரடி.. முன்னாள் காதலி போட்ட ட்வீட்!

Report
1859Shares

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், சிலரின் தூண்டுதலின் பெயரில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் அவரது ரசிகர்கள் உட்பட பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சுஷாந்த் சிங் தந்தை கே.கே சிங், சுஷாந்த் சிங் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி உட்பட ஆறு பேர் மீது பீகார் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து, ரியாவுக்கு எதிராக கடும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியது. அதனை தொடர்ந்து, ரியா தொடர்பான சில வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல பீகார் அரசும், சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு ரியா சக்ரபோர்த்தியை ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டி உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி அங்கிதா லோகண்டே ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். 'நாங்கள் காத்திருந்த தருணம் இப்போது அமைந்து விட்டது' என குறிப்பிட்டுள்ளார். அதே போல சுஷாந்த் சிங் சகோதரியான ஸ்வேதா சிங் கீர்த்தியும் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ விசாரணை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.