பிரபல பாடகி மற்றும் கணவருக்கும் கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட தகவல்..!

Report
842Shares

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மிதா, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாப் பாடல்கள் பாடியுள்ளார். தனி ஆல்பங்கள் மட்டுமின்றி, திரைப்படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.அத்துடன், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல பாடகி ஸ்மிதா, தனக்கும், தன்னுடைய கணவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்மிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், அதில், “மிகவும் மோசமான நாள் நேற்று. கொஞ்சம் உடல்வலி இருந்ததால் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். எனக்கும் எனது கணவரக்கும் கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என வந்திருக்கிறது. விரைவில் கொரோனாவை வென்று வருவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாடகி ஸ்மிதா.