மிக உயரிய பதவியில் இருக்கும் தெரு நாய்! கடும் வியப்பில் மூழ்கிய நெட்டிசன்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்

Report
231Shares

ஹூண்டாய் நிறுவனம் தெரு நாய் ஒன்றை தத்தெடுத்து, அதற்கு சேல்ஸ் மேன் பொறுப்பு வழங்கியுள்ளது.

சேல்ஸ் மேன் ஐடி கார்டு அணிந்தபடி நாய் போஸ் கொடுக்கும் புகைப்படும் தற்போது வைரலாகியுள்ளது.

பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சேண்டா மாகாணத்தில் செர்ரா என்ற பகுதியில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஷோ ரூம் உள்ளது.

இந்த ஷோ ரூமுக்கு அருகில் தெரு நாய் ஒன்று நீண்ட காலமாக சுற்றித்திரிந்துள்ளது. மேலும், ஹூண்டாய் பணியாளர்களிடம் நெருங்கி பழகவும் ஆரம்பித்தது. இதனையடுத்து அந்த தெருநாயை ஹூண்டாய் நிறுவனம் தத்தெடுத்தது. அதற்கு டக்சன் பிரைம் என்றும் பெயரிட்டனர்.

இந்த நிலையில், டக்சன் நாய்க்கு 'சேல்ஸ் மேன்' என்ற பொறுப்பையும் வழங்கி, அதற்கான ஐடி கார்டையும் வழங்கியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானத்தில் நெட்டிசன்கள் கடும் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

கொரோனா காலத்தில் பலரும் வேலை இல்லாமல் தவிக்கும் நிலையில் நாய் ஒன்றுக்கு வேலை கிடைத்திருப்பது மிகவும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.