தேர்வில் சாதித்த பிரபல நடிகரின் மகன்: குவியும் பாராட்டுகள்

Report
1624Shares

பிரபல நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய் ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது ரேங்க் எடுத்து அசத்தியுள்ள நிலையில் அது குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய்.

இவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 75 ஆவது ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஜெய் மற்ற சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார். பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, யு.பி.எஸ்.சி பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் சென்னையிலேயே முடித்திருக்கிறார். தனது முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் என்ற தன் கனவை எட்டிப் பிடித்திருக்கிறார்.

இதுகுறித்து ஜெய் கூறுகையில், ஐ. ஏ.எஸ் கனவு என்பது சின்ன வயதில் இருந்தே என்னுடைய விருப்பமாக இருந்தது. அப்பா அம்மா ரெண்டு பேரும் என்னை ரொம்ப ஊக்குவிச்சாங்க, அப்பா சினிமாவுல இருந்தாலும் எப்பவுமே என்னை சினிமாவுக்கு வரணும்னு கட்டாயப்படுத்தினதில்ல.

அரசு அதிகாரியாக வரணும் என்பது என்னோட நீண்டநாள் ஆசை. அதுக்காக நிறைய படிச்சேன், அதிக நேரம் ஒதுக்கினேன், இதுக்கு அப்பாவும் அம்மாவும் ரொம்ப துணையாக இருந்தார்கள், அந்த ஆதரவு தான் எனக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளது.

75ஆவது ரேங்க் வாங்கியதால் நிச்சயமாக தமிழ்நாட்டில் தான் எனக்கு போஸ்டிங் கிடைக்கும். கல்வி, தொழில் வளர்ச்சி, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கமா இருக்கும்.

இதுவரைக்கும் வாழ்க்கையில எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லைக் கோடும் போடாம உன்னோட வாழ்க்கையை நீயே தீர்மானித்து கொள் என்று சொன்ன அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மிகவும் நன்றி என கூறியுள்ளார்.