இந்த ஆசையால் தான் வனிதாவின் பெயரை பச்சை குத்தினேன்.. முன்னாள் காதலர் ராபர்டின் தகவல்..!

Report
14373Shares

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.

இதைத்தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் அதன் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து விலகினார்.

ஆகாஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் (ஸ்ரீஹரி) மற்றும் ஒரு மகள் ( ஜோவிகா) பிறந்தனர்.

அதன் பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்த இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின்ன 2வது கணவர் மூலமாக இன்னொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்த வனிதா அதன் பின்னர் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை காதலித்து வந்தார்.

அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறினார். ஆனால் ராபர்ட் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யாததால் இவர்களின் திருமணம் நடைபெறாமல் போனது. நாளடைவில் இவர்களுக்குள்ளும் பிரிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், தற்போது வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன்பின்னர் ராபர்ட் பேட்டி ஒன்றில் வனிதாவுடன் உறவு குறித்து பேசியுள்ளார்.

அதில், சிவாஜி எம்ஜிஆர் ரஜினி என்ற படத்தை நானும் வனிதாவும் சேர்ந்து தான் தயாரித்தோம். ஆனால் நான் என்னுடைய பெயரை போட்டுக் கொள்ள சொல்லவில்லை. இதனால் தயாரிப்பாளர் என்ற பெயரில் வனிதாவின் பெயர் மட்டும் இருந்தது.

மேலும் என் அப்பாவிற்கு என்னை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என ஆசை. அந்த ஆசை வனிதாவால் நிறைவேறியது. அதனால் தான் அவர் மீதான அன்பில் அவரின் பெயரை பச்சை குத்தி கொண்டேன்.

பச்சை குத்திய ஒரு மாதத்திற்குள்ளேயே எங்கள் இருவருக்கும் இடையே நிறைய பிரச்சனைகள் ஏற்பட தொடங்கின. குத்திய பச்சையில் புண் கூட ஆறாத நிலையில் அதனை நான் அழித்து விட்டேன் என கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் இருவரும் இணைந்து தயாரித்து நான் நடித்த படத்தின் போது வனிதா என்னை கேட்காமலேயே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறினார்.

அதன் பின்னர் ஏன் அப்படி சொன்னீர்கள் எனக் கேட்டதற்கு அதை பின்னாடி பார்த்துக் கொள்ளலாம் என கூறி விட்டார். படத்துக்காகத் தான் இவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார் என பேசியுள்ளார்.

loading...