தீவிரமாகும் வனிதாவின் பிரச்சினை! லைவில் முத்தம் கொடுப்பதற்கு தான் பீட்டர் வருவாரா?... பிரபல இயக்குனர் பகீர்

Report
1316Shares

பீட்டர் பால் நேரலையில் வனிதாவிற்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்க மட்டும் வருவாரா என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் கொடுத்த நிலையில், பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் பல பிரலபங்கள் கருத்தினை தெரிவித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தனது கருத்தினை வெளியிட்டார்.

இதை பார்த்த வனிதா அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ரவீந்தரோ நான் மன்னிப்பு கேட்க முடியாது, மாறாக என் உடல் எடையை விமர்சித்ததற்காக வனிதா தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் ரவீந்தர் அளித்துள்ள பேட்டியில், எலிசபெத் ஹெலன் நான்கு ஆண்டுகளாக பீட்டர் பால் விஷயத்தில் ஏன் ஒரு முடிவு எடுக்கவில்லை என்று வனிதா கேட்பது கேனத்தனமானது.

ஹெலனுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர் பிள்ளைகளின் நலனை மனதில் வைத்து தான் முடிவு எடுக்க வேண்டும். நல்ல குடும்பத்து பெண் அப்படித் தான் இருப்பார். அவசரப்பட்டு முடிவு எடுக்க மாட்டார்.

என் பர்சனல் விஷயத்தை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று வனிதாக்கா கேட்கிறார். இது அவர் பர்சனல் கிடையாது. ஒரு குடும்பத்தை கெடுத்ததால் தான் முதல் மனைவியின் கதறலை பார்த்து நாங்கள் எல்லாம் நியாயம் கேட்கிறோம்.

நான் வனிதாக்கா அளவுக்கு தரம் கெட்டு பேச விரும்பவில்லை. அவர் விவாகரத்து பெறாத பீட்டர் பாலை திருமணம் செய்தது தவறு என்று தான் சொல்கிறேன்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி அம்மா மாதிரி நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். 16 வயது மகளிடம் போய் நான் மீண்டும் கல்யாணம் பண்ணிக்கட்டா என்று கேட்பது தான் கேவலமானது. லைவில் வந்து கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் வருவாரா, விளக்கம் கொடுக்க வர மாட்டாரா என்று தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமார் தன் யூடியூப் சேனலில் லைவில் வந்து பேசினார். பேசி முடித்தபோது பீட்டர் பாலை கேமராவுக்கு முன்பு வரவழைத்து முத்தம் கொடுத்தார். அதை தான் தயாரிப்பாளர் ரவீந்தர் விமர்சனம் செய்துள்ளார்.

loading...