நடிகை ஷாலினியுடன் இருக்கும் 18 வயது புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Report
11748Shares

பிரபல தனியார் ரிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை பிரவீனா.

ஒரு அம்மாவாக இவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது. இதன் பின்னர், பிரியமானவன் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர்.

மேலும், இரண்டு முறை சிறந்த நடிகைக்கான கேரளா ஸ்டேட் அவார்டு மற்றும் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான கேரளா அவார்டு உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

தமிழில் சீரியல் நடிகையாக இவர் அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும், மெல்ல மெல்ல வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

அந்த வகையில், கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகவும், சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.

இப்படி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான இவர் சமூக வலைத்தளங்களிலும் புகைப்படத்தை பதிவிடுவதில் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவரும் 18 வயது பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

loading...