இதுதான் புடவை கட்டுற லட்சணமா? வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி! விடாமல் துரத்தும் பெண்

Report
4187Shares

வனிதாவை தாறுமாறாக பேசி காணொளி வெளியிட்ட பெண் தற்போது அவருக்கு புடவை கட்டுவதற்கு கற்றுக்கொடுத்து திட்டித் தீர்க்கும் காணொளியினை வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்திற்கு பீட்டரின் முதல்மனைவி எலிசபெத் பயங்கர எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினை பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகின்றது.

சில பிரபலங்களும் இதுகுறித்து கருத்துக்களை கூறிவிட்டு கடைசியில் சிக்கலில் மாட்டிக்கொண்டு வருகின்றனர். ஆனால் நேற்று சூர்யா தேவி என்ற பெண் தாறுமாறாக பேசி காணொளியினை வெளியிட்டு வனிதாவை வம்பிற்கு இழுத்துள்ளார்.

நாளுக்கு நாள் வனிதாவை சீண்டிவரும் இப்பெண் இன்றும் தனது பாணியில் காணொளியினை வெளியிட்டு வெளுத்து வாங்கியுள்ளார். வனிதா புடவை கட்டியதையும், அவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதை கேட்ட இப்பெண் தாறுமாறாக விளாசியுள்ளதோடு, புடவைக் கட்டவும் கற்றுக்கொடுத்துள்ளார்.