கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய் மகன் ஹீரோவாக போகிறாரா?.. ஆசை என்னன்னு பாருங்க..!

Report
731Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு ஒரு மகள் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யும் நடிக்க வருவாரா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

அதற்குத் ஏற்றார்போல் கனடாவில் திரைத்துறை சம்பந்தப்பட்ட படிப்பு படித்து வரும் ஜேசன் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனால், "மாஸ்டர்" படத் தயாரிப்பாளரும், விஜய்யின் உறவினருமான பிரிட்டோவின் புதிய படத்தில் சஞ்சய் ஹீரோவாகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு பட வேலைகள் ஆரம்பமாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்தச் செய்தி உண்மையில்லை என பிரிட்டோ தெரிவித்துள்ளார். அப்படி எந்த ஒரு பேச்சும் இதுவரை நாங்கள் பேசவில்லை. விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்து வருகிறார். அவருக்கு இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசை.

படித்து முடித்து வந்த பிறகு ஹீரோவாக ஆவாரா? இயக்குனர் ஆவாரா? என்பது அவருக்கு தான் தெரியும்.

இதுநாள் வரை நானும் விஜய்யும் கூட இதைப் பற்றி பேசியது இல்லை' என பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

loading...