30 வயதான பிரபல கன்னட நடிகர் திடீர் தற்கொலை... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்கள்!

Report
458Shares

பிரபல கன்னட நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சுஷீல் கவுடா. அந்தபுரா என்ற தொடர் இவரை மக்களிடம் பிரபலமடையச் செய்தது.

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார். 30 வயதாகும் இவர் மாண்டியாவில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மிகவும் கனிவான, எதற்கும் பதறாத சுஷீல் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்று புரியவில்லை என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

சுஷீல் கவுடா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சலாகா என்ற திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. துனியா விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இதையடுத்து, சுஷீல் மரணம் குறித்து தனது ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருக்கும் துனியா விஜய், அவரை நான் முதலில் பார்த்தபோது நல்ல ஹீரோவாக வருவார் என்று நினைத்தேன்.

படம் வெளியாவதற்குள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். என்ன பிரச்சினைகள் இருந்தாலும் தற்கொலை தீர்வாகாது. தொடர் மரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என்று நினைக்கிறேன். கொரோனா காலத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.” என்று நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.

loading...