மூச்சிரைக்க ஓடி வந்த பெண்... பஸ்சை நிறுத்தியதும் நடந்த சம்பவம்! பாருங்க அசந்து போயிடுவீங்க

Report
1948Shares

கேரளாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்றின் காணொளி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் பெண் ஒருவர் மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தை நிறுத்துகிறார். எதற்காக அவர் பேருந்தை நிறுத்தினார் என யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சாலையின் ஓரமாக மாற்றுத்திறனாளி ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார். அவர் அந்த பேருந்தில் செல்ல வேண்டும். ஆனால் பேருந்து வேகமாகச் சென்றதால் அவரால் ஏற முடியாமல் போனது.

இதைக் கவனித்த அந்த பெண், ஓடி வந்து பேருந்தை நிறுத்தி, நடத்துநரிடம் விபரத்தைக் கூறுகிறார். பின்னர் அந்த பெண் மாற்றுத் திறனாளியை அழைத்துக் கொண்டு அந்த பேருந்தில் ஏற்றி விட்டுத் திரும்பிச் செல்கிறார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட குறித்த காட்சி வைரலாகியதோடு, அப்பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.

loading...