மறைந்தும் உலகளவில் சாதித்த சுஷாந்த்! தளபதி விஜய்யின் பரிதாப நிலையை பாருங்க...? வியப்பில் ரசிகர்கள்

Report
626Shares

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாரா படத்தின் டிரைலர் உலகளவில் 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை அள்ளிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலர் சாதனையை முறியடித்துள்ளது.

இந்தியளவில் ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டிரைலர் 2 மில்லியன் லைக்குளை அள்ளி படைத்த சாதனையை விஜய்யின் பிகில் படம் முறியடித்து இருந்தது. இந்நிலையில், இந்தியா படங்களை மட்டும் அல்ல, ஹாலிவுட் படங்களின் அத்தனை சாதனைகளையும் சுஷாந்த் சிங் படம் கடந்திருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான The Fault in Ours Stars படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் விரைவில் வெளியாக விருக்கும் Dil Bechara. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இருவர், எப்படி காதலால் இணைகிறார்கள் என்பதை சோகமும் சந்தோஷமும் கலந்து கலவையாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது.

மேலும் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' பட டிரெய்லர் 3.2 + மில்லியன் லைக்குகள், 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' பட டிரெய்லர் 2 - 2.9 + மில்லியன் லைக்குகள் பெற்று முறையே 3 மற்றும் 4வது இடத்திலும், தளபதி விஜய்யின் 'பிகில்' டிரெய்லர் 2.3 + மில்லியன் லைக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளது.

loading...