பரோட்டாவில் முககவசம் செய்து அசத்தும் உணவகம்.. அலைமோதும் மக்கள்.. எங்கு தெரியுமா?

Report
173Shares

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. அப்படி இந்தியாவிலும் அதிகமாக பரவி வரும் வேலையில், விழிப்புணர்வுடன் இருக்க அரசு பல கோரிக்கைகளை அன்றாடம் எழுப்பி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்யும் விதமாக தமிழகத்தில் உள்ள மதுரையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணர்வுக்காக பிரபல தனியார் உணவகம் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது.

அந்த வரிசையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள பிரபல உணவகம் ஆனது, பரோட்டாவிலே முக கவசம் தயாரித்து விற்பனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த முகக்கவசங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து உணவகம் சார்பில் கூறும் போது “ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பரோட்டோ முககவசங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகவும் பரவி வருகிறது.

loading...