சிரஞ்சீவி சர்ஜாவின் இரங்கல் கூட்டம்.. புன்னகையுடன் குடும்பத்தோடு போஸ் கொடுத்த மேக்னா.. காரணம் இதுவா?

Report
981Shares

சமீப நாட்களாக திரைபிரபலங்களின் மரணம் அதிகரித்து வருகிறது. இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் இருக்கிறது. அதில், பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவர், ஜூன் 6 ஆம் திகதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை.

தற்போது இவருக்கு 39 வயது தான் ஆகிறது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த இவரின் மரணம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியே ஏற்படுத்தி இருந்தது. இதனால் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், சிரஞ்சீவி இறந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் சிரஞ்சீவி குடும்பத்தினர் இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்த்தனர்.

அப்போது எடுத்த சில புகைப்படங்களை சிரஞ்சீவியின் மனைவி எடுத்த தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துருந்தார்.

ஆனால், அதில் அனைவரும் சிரிப்புடன் காணப்பட்டதால் இரங்கல் கூட்டத்தில் எப்படி இப்படி ஒரு சந்தோசம் என்று ரசிகர்கள் குழம்பி இருந்தனர். இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் மேக்னா.

அதில் ,அன்புக்குரிய ச்சிரு, ச்சிரு என்றால் கொண்டாட்டம்தான். இதற்கு முன்னால் எப்படியோ அப்படியே தான் எப்போதும். இதை தவிர வேறு மாதிரி இருந்தால் நீங்கள் அதைவிரும்ப மாட்டீர்கள் மாதிரி எனக்கு தெரியும்.

நீங்கள் தான் என் புன்னகைக்கு காரணம். எனக்கு அவர் கொடுத்த இந்த குடும்பம் மிகவும் விசேஷமானது. எப்போதும் நாங்கள் ஒன்றாக நீங்கள் நினைத்தது போல அனைத்து நாட்களையும் வாழ்வோம்.

அன்பு, சிரிப்பு, நேர்மை எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமையுடன் நாங்கள் வாழ்வோம். லவ் யு பேபி மா என்று பதிவிட்டிருக்கிறார்.

loading...