மகள் வயது பெண்ணை திருமணம் செய்த நடிகர் வெளியிட்ட காட்சி.... இவரோட அம்மாவா இது?

Report
1448Shares

பிரபல நடிகர் மிலிந்த் சோமன் தனது தாயின் காணொளியை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 54 வயசிலும் பார்க்க 20 வயசு பையன் போல் செம்ம பிட்டாக இருக்கும் மிலிந்த் சோமனுக்கு ரசிகர்கள் பட்டாளம்.

வயசானாலும் காதல் மன்னனாக வலம் வருகிறார் மிலிந்த் சோமன். கடந்த 2006ம் ஆண்டு மைலின் ஜம்பனாஸை என்ற நடிகையை கரம் பிடித்த சோமன், கருத்து வேறுபாடு காரணமாக 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் 26 வயதான அங்கிதா என்ற விமான பணிப்பெண்ணை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது, காரணம் இவர்கள் இருவருக்கும் இடையே சுமார் 26 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தது. இருப்பினும் அனைத்து தடைகளையும் மீறி, பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. தற்போது இந்த தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தும் வருகிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மிலிந்த் சோமன் சமீபத்தில் தன்னுடைய 81வது பிறந்தநாளை கொண்டாடிய அம்மாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் இந்த வயதிலும் மிகவும் ஆரோக்கியமாக புஷ் அப் செய்யும் காட்சி இதில் இடம்பெற்றுள்ளது.

loading...