வெளிநாட்டிலேயே செட்டிலான நடிகர் அப்பாஸ்.. மகள் ஹீரோயினாகிறாரா? வைரலாகும் புகைப்படம்!

Report
1651Shares

நடிகர் அப்பாஸ் தமிழில் காதல் தேசம்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதையடுத்து பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா, ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக, ராமானுஜம் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

இதன் பின்னர் அதிகமான பெண் ரசிகர்கள் கொண்ட அப்பாஸ், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, தெலுங்கு பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.

இதையடுத்து, ஆயிரத்தில் ஒருவன், குரு என் ஆளு உட்பட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய எரும் அலி, ஃபேஷன் டிசைனரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு குழந்தைகள் உள்ளன.

இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் நியூசிலாந்து சென்றார். அங்கு ஆக்லாந்து நகரில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், நடிகர் அப்பாஸின் 21 வயது மகள் எமிராவின் புகைப்படங்கள் இணையத்தில் திடீரென வைரலாகி வருகின்றன.

அவரை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க அப்பாஸூம், அவர் மனைவியும் முடிவு செய்துள்ளதாகவும். அதனால் அவர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அப்பாஸோ, எரும் அலியோ எதையும் தெரிவிக்கவில்லை.

loading...