இது அர்த்தமில்லை.... குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடு! வெளுத்து வாங்கிய வனிதா? தீயாய் பரவும் டுவிட்

Report
5192Shares

வனிதாவின் திருமணம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குட்டி பத்மனி, வனிதாவின் திருமணம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது, இரண்டு முறை மறுவாழ்வு மையத்திற்கு சென்று வந்தவர் மீண்டும் குடிக்க தொடங்கினால் சரியாக இருக்காது. குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருக்காது என்று கூறியுள்ளார். வனிதா தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இதனை அறிந்த வனிதா, டிவிட்டரில் அவரை சரமாரியாக விளாசி விட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டியிருப்பதாவது, டியர் குட்டிபத்மினி இங்கே பேசுவதற்கு மன்னிக்கவும் ஆனால் நீங்கள் இங்கே பேசியிருக்கிறீர்கள்.

என்னிடம் பேசவில்லை. நீங்கள் என்னை ஒரு நேர்காணல் எடுத்திருக்கலாம். நான் உங்களை மதிக்க கடமைப்பட்டிருக்கேன்.

ஆனால் இப்போது நீங்கள் நோக்கம் என்னவென்று நிரூபித்துவிட்டீர்கள். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். என் குழந்தைகளை வெளியேற்றுவது குறித்த உங்கள் மோசமான பரிந்துரைகளுக்கு நான் உங்களைபோல் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நடிகை குட்டி பத்மினி, வனிதா நான் உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள். நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். என்னை நீ புரிந்து கொள்ளாததற்கு வருத்தப்படுகிறேன் என்ற பதிவிட்டிருந்தார்.

இந்த டிவிட்டை பார்த்த நடிகை வனிதா, மன்னிப்பு கேட்க முயற்சி செய்யுங்கள், குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்புவது போன்ற ஒரு முதிர்ச்சியற்ற ஆலோசனையை கூறியிருக்கிறீர்கள்.

என் குழந்தைகள் தான் என் வாழ்க்கையும் எனது உலகமும் தயவுசெய்து உங்கள் சேனலில் சினிமா நபர்களைப் பற்றிய கிசுகிசுக்களைத் தவிர்த்து, உண்மையான விஷயத்திற்கு செல்லுங்கள். எல்லோரும் இப்படி சொல்ல மாட்டார்கள். அது இன்னும் வலிக்கிறது என பதில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது விசித்திரமாக உள்ளது. பொது மக்களுக்கு காண்பிப்பதை விட நன்கு அறிந்தவர்கள் ஏன் தங்கள் கவலைகளையும் உரையாடல்களையும் தனிப்பட்ட முறையில் காட்ட முடியாது!! நான் சொல்வது தவறு இல்லை எனில் பிரபலங்கள் எப்போதும் இதைத்தான் செய்கிறீர்கள். இப்போது உங்கள் மன்னிப்புக்கு அர்த்தமில்லை என பதிலளித்துள்ளார்.

அதனை பார்த்தே பார்த்த குட்டி பத்மினி, எனக்கு உண்மையிலேயே அவரை பிடிக்கும். சோஷியல் மீடியாவில் அதுகுறித்து கருத்து தெரிவித்தது தவறுதான். அவருக்கு எந்த கெட்டதும் நடந்துவிடக்கூடாது என விரும்புகிறன் என தெரிவித்தார்.

அதற்கும் பதிலளித்த வனிதா, என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். என் குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும் எனக்கு தெரியும். நான் கஷ்டப்படும் போது யாரும் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. உதவவும் முன்வரவில்லை. எல்லாவற்றையும் கண்ணியத்துடன் கையாளுகிறேன். உங்கள் சேனலுக்கு இது ஒரு சீப் பப்ளிசிட்டி கொடுக்கும் என நம்புகிறேன் என அடுத்தடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.

loading...