முத்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து வனிதா வெளியிட்ட புகைப்படம்!... என்ன கருமம்டா இது- திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

Report
1613Shares

பிக் பாஸ் வனிதா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில் அவர் கணவர் பீட்டர் பால், வனிதாவின் நெற்றியில் முத்தமிடுகிறார். இதற்கு கேப்ஷனாக, ராமின் தங்கமீன்கள் படத்தில் இடம்பெறும் கவித்துவமான கேப்ஷனை வனிதா பயன்படுத்தி இருக்கிறார்.

'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று' என்று கூறியிருக்கிறார்.

இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக அவரை விளாசித் தள்ளியுள்ளனர். ஒருவர், 'இவரு உங்களுக்கு அப்பாவா அக்கா?' என்று கேட்டு கலாய்த்திருக்கிறார். மத்தவங்க குடும்பத்தை அழிச்சுட்டு நீங்க நிம்மதியா வாழறது சுயநலம் என்று ஒருவர் சாடி இருக்கிறார்.

இன்னொருவர், இந்த முட்டாள்தனத்தை எல்லாம் விடுங்க, முத்த மேட்டரை தனியா வச்சுக்கோங்க. அவர் மனைவிய நினைச்சுப்பாருங்க. மத்தவங்க மனசுக்கு மரியாதை கொடுக்கணும்' என்று சிலர் விளாசியுள்ளார்.

இன்னும் சிலர், முத்தம் கொடுக்கறதை பாவம்னு சொல்லல, ஆனா, ஏன் இன்னொரு பெண்ணோட கணவரோடன்னுதான் கேட்கிறோம் என்று தாளித்திருக்கின்றனர். இன்னும் சிலர் கடுமையாக விளாசியுள்ளனர். இந்த ஒரு புகைப்படத்தினால் சமூக வலைத்தளத்தில் நடிகை வனிதாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த புகைப்படமும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...