டிக்டாக் தடையை பற்றி ரசிகர்கள் கவலை படவேண்டாம்.. வேற ஆப் மூலம் வருவேன்..!

Report
180Shares

இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரையும் அடிமையாக வைத்திருந்த ஒரு செயலி என்றால் அது டிக்டாக் தான்.

இந்த டிக்டாக் செயலியால் பல ஆபத்தான விஷயங்களே இதுவரை அரங்கேறியுள்ளது. பலரும் இந்த டிக்டாக் செயலியை தடை செய்யவேண்டும் என கூறிவந்தும் பலன் இல்லாமலே போனது.

ஆனால், தற்போது மத்திய அரசு 59 சீன ஆப்களை அதிரடியாக தடை செய்தது. இந்த நிலையில் டிக்டாக் தடையால் அதன் பயனளார்கள் மிகுந்த பாதிப்படைந்தே உள்ளனர்.

இதையடுத்து டிக்டாக்கின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர் தான் இலக்கியா. இவர் ஆடும் கவர்ச்சி நடனத்தால் டிக்டாக்கில் அதிக கவனத்தை பெற்றார்.

இதையடுத்து தற்போது டிக்டாக் தடைக்கு பின் இலக்கியா நேர்காணலில் பேசியுள்ளார். அதில், டிக்டாக் தடைசெய்யப்பட்டது நல்ல விஷயத்திற்க்காக தான் அதனால் பிரச்சினை இல்லை ஆனால், கொரோனா ஊரடங்கால் ரொம்பவே போர் அடிக்கிறது.

மேலும், டிக்டாக் இல்லைனா என்ன? என் ரசிகர்களுக்காக நான் வேற ஆப் மூலம் வருவேன் என பல தகவல்களை குறிப்பிட்ட காணொளியின் மூலம் பகிர்ந்துள்ளார் இலக்கியா..

loading...