கேஎப்சி சிக்கன் செய்து அசத்திய ஜோவிகா... கணவருக்கு ஊட்டிவிட்ட வனிதா! இந்த தடவை முத்தம் யாருக்கு தெரியுமா?

Report
3275Shares

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்திற்கு பீட்டரின் முதல்மனைவி எலிசபெத் பயங்கர எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினை பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகின்றது.

எலிசபெத் பேசியதற்கு வனிதாவும் தக்க பதிலடி கொடுத்து வருவதுடன், இதில் கருத்து கூறிய லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் வனிதா தாறுமாறாக பேசியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் தனது சமையல் கலையினைத் தொடங்கிய வனிதா இன்று தனது மகளுடன் கே.எப்.சி - சிக்கன் செய்து அசத்தியுள்ளார். மகளுக்கு தேவையான ஆலோசனையைக் கொடுத்து அவரையே தயார் செய்ய வைத்துள்ளார்.

ஜோவிகா மற்றும் வனிதாவின் சமையலை கணவர் பீட்டர் காணொளியாக எடுத்த நிலையில் இறுதியாக கணவருக்கு சிக்கன் ஊட்டியுள்ளார். அப்பொழுது நகைச்சுவையாக சிக்கனுக்குக் கூட முத்தம் கொடுக்கிறார் பாருங்க என்று வனிதா கூற அவரது மகள் ஜோவி சிரிப்பை அடக்கமுடியாமல் அருகில் சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார். குறித்த புகைப்பட தொகுப்பு இதோ....

loading...