சுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்!

Report
5058Shares

அரணை ஒன்று மதில் மேல் இருப்பதை படம் பிடித்த பெண்கள், அங்கு திடீரென பாம்பு ஒன்றும் வந்ததும் அலறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் மதில் மேல் இருந்த அரணையினை உன்னிப்பாக படம் பிடித்த சிறுமி, வீடியோவில் அந்த அரணையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றி ஜாலியாக பேசிக்கொண்டே இருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக அரணையை விழுங்க பாம்பு எங்கிருந்தோ திடீரென தாவி வந்தது.

அவ்வளவுதான், வீடியோ எடுத்த சிறுமி, அந்த நொடியில், “என்ற அம்மச்சியே...” என்கிற சத்தத்துடன் அலறி அடித்துக்கொண்டு பதறியுள்ளனர். இந்த வீடியோ “கிளைமேக்ஸ்தான் உச்சம்.. ‘என்ற அம்மச்சியே..’ மனசுல பெரிய டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ்னு நெனைப்பு” என்று பதிவிடப்பட்டு, ட்விட்டரில் பகிரப்பட்டதை அடுத்து, வைரலாகி வருகிறது.

loading...