ஜூம் வீடியோ காலில் மீட்டிங்... கேமரா ஆன் ஆனது தெரியாமல் பெண் செய்த செயல்! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

Report
816Shares

ஜூம் வீடியோ காலில் கேமரா ஆன் ஆனது தெரியாமல் பெண் செனட்டர் ஒருவரின் அரை நிர்வாண படம் எதிர்பாராத விதமாக வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள் உடனடியாக அவரிடம் தெரிவிக்க, அந்த செனட்டர் உடனே சரி செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண் செனட்டர் மர்தா லூசியா மிச்செர் இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் விளக்கக் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ''பொருளாதார சூழ்நிலை குறித்து நடைபெற்ற முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு, கம்ப்யூட்டரின் கேமரா ஆனில் இருந்ததை கவனிக்காமல் நான் எனது உடையை மாற்றிக் கொண்டேன்.

அப்போது இந்த தவற்றைக் கவனித்த சக செனட்டர்கள் அலேஜான்ட்ரோ அர்மென்ட்ரா மியர் மற்றும் ஓவிடியோ பெரால்டா சுவாரஸ், ஆகியோர் என்னை அலெர்ட் செய்தார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவத்தைச் சிலர் கிண்டல் செய்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்கள். அதற்கு மர்தா லூசியா மிச்செர் பதிலளிக்கையில், ''தற்செயலாக நடந்த இந்த சம்பவத்தில் என்னுடைய உடல் தெரிந்து விட்டது.

இதற்காக நான் அவமானப்படப் போவதில்லை. ஏனென்றால், அது பெண்களின் சாதாரண மற்றொரு உறுப்பு போன்றதுதான். எனவே தற்செயலாக நடந்த இந்த சம்பவத்தை வைத்துக் கிண்டல் செய்பவர்கள் குறித்து எனக்கு கவலையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

loading...