வறுமையில் கதறும் பிரபல நடிகர்! 300, 400 ரூபாயாவது அனுப்பி விடுங்க... தீயாய் பரவும் காட்சி

Report
879Shares

ஹிந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ராஜேஷ் கரீர் கொரோனா ஊரடங்கு காரணமாக வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

இவர் மங்கள் பாண்டே, அக்னிபத் போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் "நான் இப்பொழுது கேட்பதற்கு அசிங்கப்பட்டால், எனது வாழ்க்கையே கடினமாகிவிடும். எனது நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

உதவி தேவைப்படுகிறது. உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்கிறேன் 300, 400 ரூபாயாவது உங்களால் முடிந்தால் அனுப்பிவிடுங்கள். எப்பொழுது ஷுட்டிங் ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை. அல்லது எனக்கு வேலை கிடைக்குமா என்று கூட தெரியவில்லை.

வாழ்க்கை அப்படியே நின்று போய்விட்டது. என்னால் எதையும் புரிந்து கொள்ளவில்லை. வாழ உதவி செய்யுங்கள். ப்ளீஸ் ப்ளீஸ் உதவி செய்யுங்கள்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.

loading...