ஊரடங்கில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டு.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சமந்தா..!

Report
857Shares

நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த கொரோனா பொது முடக்க காலத்தில், அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர்கள், நடிகைகள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

அதே நேரத்தில், நடிகைகள் உடற்பயிற்சி வீடியோக்கள், வித்தியாசமான வேடிக்கையான சவால் வீடியோக்கள், தங்களுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சமந்தா இரண்டு விரல்களை நீட்டி விக்டரி என்று காட்டி தனது மேக்அப் இல்லாத புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர்கள், நடிகைகளை மேக்அப் உடன் சினிமாவில் பார்த்து பழகிவிட்ட நிலையில், மேக் அப் இல்லாமல் பார்க்கும் புகைப்படங்களுக்கு ஆவலாக இருக்கிறார்கள்..

loading...