27 வயதில் பிரபல பாலிவுட் நடிகர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்கள்..!

Report
234Shares

பாலிவுட் சினிமாவில் உவா, மிலன் டாக்கீஸ், சல்மான் கானுடன் ரெடி, ஜபாரியா ஜோடி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் மோஹித் பெக்ஹெல்.

இவர் சைஃப் அலி கான், ராணி முகர்ஜீ நடிப்பில் உருவாகி வரும் பண்டீ அவுர் பப்ளி 2 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

இந்த நிலையில், மோஹித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறிவந்த நிலையில், திடீரென அவரது வீட்டில் உயிரிழந்துவிட்டதாக அவரது நண்பரும், இயக்குனருமான சாண்டில்யா இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பாலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரும் மோகித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

loading...