இந்த யானைகளுக்கு நடந்தது என்ன? உண்மையை உடைத்த காணொளி!

Report
194Shares

யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவது விளையாட்டிற்காக இல்லை, அதற்கு பின் அறிவியலும் இருக்கும் என்பதை பலர் புரிந்து கொள்ளாத ஒன்றாக உள்ளது.

ஊரில் எல்லாம் ஒரு பழமொழி சொல்வார்கள், ''யானை தானே தன் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்டது போல்'' என்று. தெரிந்தே தப்பு செய்து அதன் விளைவை அனுபவித்தவர்களுக்கு இந்த பழமொழியை சொல்வார்கள்.

ஆனால் உண்மை அது அல்ல. யானை தன் மீது மண்ணை அள்ளிப் போடுவதற்கு பின் அறிவியலும் கலந்து இருக்கு. அதன் உடல்நிலை நலமாக இருக்க தான் அதை செய்கிறது. அது தெரியாமல் பலர் அதை தங்களுக்கு சாதகமாக்கி பழமொழியாக்கி விட்டனர்.

இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் ஆப்பிரிக்க யானைகள் மணல் குவியலில் படுத்து உருண்டு விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த யானைகள் அப்படி செய்வதற்கு காரணம் என்ன என்பதையும் பதிவிட்டுள்ளார்.

அதில், “யானைகள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போடுவதால் பூச்சி கடியிலிருந்து தப்பிக்க முடியும். யானையில் தோல்களில் மணல் துகள் இருப்பதால் வண்டு உள்ளிட்ட பூச்சிகள் அவற்றை கடிக்க முடியாது. மேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் யானைகள் இதுப் போன்று செய்கிறது“ என்று குறிப்பிட்டுள்ளார்.

loading...