விவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகையின் கணவர் திடீர் திருமணம்... காரணம் இந்த நடிகர் தானா?

Report
1438Shares

காதலித்து திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மேக்னா வின்சென்ட் விவாகரத்து பெற்றுள்ளார்.

தமிழில் பொன்மகள் வந்தாள், தெய்வம் தந்த வீடு, அவளும் நானும் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்திருக்கும் மேக்னா வின்சென்ட், மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார். டிவி தொடர்கள் மட்டுமின்றி பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்திலும் மேக்னா நடித்திருக்கிறார்.

இவர் டான் டோனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு எர்ணாகுளத்தில் உள்ள தேவலாயத்தில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்தில் ஏராளமான திரைத்துறையினரும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து ஓராண்டிலேயே டான் டோனி - மேக்னா தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இருவரும் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதையடுத்து டான் டோனி தற்போது மறுமணத்துக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென தனது காதலியை டிவைன் கிளாரா மணிமுறியில் திருமணம் முடித்துள்ளார்.

இதுபற்றி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள டான் டோனி, இது லாக்டவுன் திருமணம். எளிமையாகவும் தாழ்மையாகவும் நடந்த திருமணம்.

மாஸ்க் அணியாமல் திருமணம் செய்துகொண்டோம். அதிகாரபூர்வமாக அறிவிக்காததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று தெரிவித்துள்ளார். திருமணப் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடம் பொன்மகள் சீரியலில் நடித்து வந்த விக்கிக்கும், மேக்னாவிற்கும் இடையே காதல் என்று கூறப்பட்டு வந்தது.

தற்போது விவாகரத்திற்கு பின்பு மேக்னா விக்கியை திருமணம் செய்யப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

loading...