பட வாய்ப்பு இல்லாமல் தெருவில் பழம் விற்கும் நடிகர்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்? தீயாய் பரவும் தகவல்

Report
956Shares

பட வாய்ப்பு இல்லாமல் நடிகர் ஒருவர் தெருவில் பழம் விற்கும் செய்தி தீயாய் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள 'ட்ரீம் கேர்ள்' படத்தில் நடித்துள்ள சோலங்கி திவாகர் கொரோனா வைரஸ் காரணமாக பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பட வாய்ப்பு இல்லாத காரணத்தால், குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக பழம் விற்பதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக நான்காவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக தினசரி ஊதியம் பெறும் திரைப்படத் தொழிலாளர்களும், நடிகர்களும் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

loading...