உண்மை அலசல்!.. கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் கடலில் வீசப்பட்டதா?

Report
2155Shares

கடலில் கரை ஒதுங்கிய நிலையில் சடலங்கள் குவிந்து கிடக்கும் அதிர்ச்சி காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

உலக அளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இறந்தவர்களின் உடல்களை கூட குடும்பத்தினருக்கு அளிக்காமல் அரசே அடக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசால் இறந்தவர்களின் சடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளதால் இனி மீன்களை சாப்பிடக்கூட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக கடற்கரையில் சடலங்கள் குவிந்து இருக்கும் 30 நொடிகள் கொண்ட வீடியோ வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.

இதேவேளை, இறந்தவர்களின் உடல்களை கடலில் வீச வாய்ப்பில்லை. அவ்வாறு செய்ததாக எந்தவொரு செய்தியும் இது வரை எந்த நாட்டிலும் வெளியாகவில்லை. இது போலியான காணொளியாக இருக்கலாம்.

இது போன்ற போலி காணொளியை வெளியிட்டு மக்களை பதற்றமடைய வேண்டாம் என்று கோரப்படுகின்றது.

குறித்த போலி காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...

loading...