பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் மீள முடியாத திரையுலகினர்கள்..!

Report
4571Shares

பிரபல மலையாள நடிகரான சசி கலிங்கா மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் சசி கலிங்கா. சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள, இவர் கடந்த சில வருடங்களாக கல்லீரல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே கல்லீரலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சசி கலிங்கா கோழிகோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், திடீரென சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். வி.சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், சினிமாவுக்காக சசி கலிங்கா என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவருக்கு வயது 59.

இவர் மலையாள மோகன்லால், மம்மூட்டி, சீனிவாசன் எனப் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் சைடு ரோல்களில் நடித்துள்ளார். 250 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

மேலும், கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இவரது இறுதிச்சடங்கில் அதிகமானோர் கலந்துகொள்ள இயலவில்லை. இதனால் அவரது இறுதிச் சடங்குக்கு திரையுலகினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

loading...