மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் மனோரமாவின் மகன்! கடும் சோகத்தில் தமிழ் ரசிகர்கள்

Report
1585Shares

பழம்பெரும் நடிகை மறைந்த மனோரமாவின் ஒரே மகனான பூபதி அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி வரை எந்த ஒரு மதுபான கடைகளும் செயல்படுத்தக் கூடாது என அரசு அறிவித்துள்ளது.

இதனால் எங்கேயும் மது கிடைக்காத ஆத்திரத்தில் பூபதி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இவருக்கு ஏற்கனவே அதிகமான குடிப்பழக்கம் உள்ளது. இவர் மது போதைக்கு அடிமையாக உள்ளார்.

தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற பழம் பெரும் நடிகை மனோரமாவின் மகனுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

loading...