வீட்டுக்குள் அடித்த சிக்சர்.... அம்பயரான குட்டி தேவதை! பாய்ந்து பிடித்த ரெய்னா... மில்லியன் பேர் ரசித்த அழகிய காட்சி

Report
278Shares

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தனது வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிரிக்கெட் விளையாட முடியாமல் வீரர்களும் அதை ரசிக்க முடியாமல் ரசிகர்களும் இந்த கொரோனாவைரஸால் சலிப்பில் உள்ளனர்.

இதனால் சுரேஷ் ரெய்னா வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் ஆடியுள்ளார். அதில் அவர் அவரது மகள் கிரேசியா உள்ளார். இன்னொரு குட்டிப் பையனும் உள்ளான். அப்பாவும், அந்தப் பையனும் கிரிக்கெட் விளையாடுகின்றனர். மகள் கார்சியாதான் அம்பயர்.

இந்த காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டிவிட்டரில் பதிவேற்றியுள்ளது. இப்போது இது வைரலாகியுள்ளது.

loading...