கொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா? தெறிக்கும் ட்விட்டர்

Report
1499Shares

கொரோனா நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளித்த அஜித்தை ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் #PerfectCitizenTHALAAJITH என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

கொரோனா நிவாரண நிதிக்கு திரையுலக பிரபலங்கள் தங்களால் முடிந்த தொகையை அளித்து வருகிறார்கள். இந்நிலையில்அஜித், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், ஃபெப்சி நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் என மொத்தம் ரூ. 1.25 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார்.

நம்ம கூட இருக்கவங்கள நம்ம பாத்துகிட்டா நமக்கு மேல இருக்கவன் நம்மள பாத்துக்குவான். வீ லவ் யூ அஜித் சார் என்று இயக்குநரும், நடிகருமான ஆத்விக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அஜித் ரூ. 1.25 கோடி கொடுத்ததுடன் இல்லாமல் பி.ஆர்.ஓ. யூனியனுக்கு ரூ. 2.5 லட்சம் நிதி அளித்துள்ளார். அவரின் தாராள மனசை பார்த்த பிற நடிகர்களின் ரசிகர்களும் பாராட்டுகிறார்கள்.

அஜித் நன்கொடை அளித்த தகவல் அறிந்ததும் அவரின் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என பலரும் #PerfectCitizenTHALAAJITH என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்கிறார்கள். இதனால் அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தல போல வருமா என்று அவரின் ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர்.

loading...