விளக்கேற்ற கூறிய பிரதமர் மோடி... கெட்ட வார்த்தையால் திட்டிய பிக் பாஸ் பிரபலம்

Report
898Shares

கொரோனா வைரஸினால் ஊடரங்கு உத்தரவினைப் பிறப்பித்த மோடி இன்று காலை மக்களிடம் பேசினார். வரும் 5ம் திகதி இரவு 9 மணிக்கு விளக்கேற்றி வைக்குமாறு வைத்துள்ள கோரிக்கைக்கு பிக்பாஸ் பிரபலம் சரமாரியாக பேசியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இருளை அகற்ற வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கேற்றுமாறு அல்லது டார்ச்லைட் அடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் இதுகுறித்தே பேச்சு எழுந்த நிலையில், பிக்பாஸ் பிரபலமான வைஷ்ணவி, மோடி கூறியதை நான் பார்க்கவில்லை... யாராவது சுருக்கமாக கூறுங்கள் என்று ட்விட் செய்துள்ளார்.

மோடி பேசியது என்னவென்று கேட்ட வைஷ்ணவி தகவல் அறிந்ததும் கடுப்பாகி நான் எந்த விளக்கும் ஏற்ற மாட்டேன் என்று கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் சிலர் வைஷ்ணவியைப் பாராட்டியும், சிலர் பிரதமரை இப்படி பேசுவது என்று கலாய்த்து வருகின்றனர்.

loading...