நடிகர் பிரஜினின் இரட்டைக்குழந்தைகளா இது? ஊரடங்கினால் தள்ளிப்போடப்பட்ட கொண்டாட்டம்

Report
606Shares

நடிகராகவும், பிரபல தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுபவர் பிரஜின். அவர் நடித்த காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். மேலும் பிரஜின், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட படங்களில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

பிரஜின் பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான சான்ட்ராவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மித்ரா, ருத்ரா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரஜின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தனது குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், என்னுடைய ஏஞ்சல்களுக்கு 1 வயதாகிறது. ஒரு தந்தையாக அதீத மகிழ்ச்சியை உணர்கிறேன். வால் பொண்ணுங்க. இவர்களது முகம் தெரியும் ஃபோட்டோவை பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் வெளியிடுகிறேன். கொரோனா வைரஸின் தாக்கத்தால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

loading...