15 வயதிலேயே போதையால் திசைமாறிய அழகிய நடிகையின் வாழ்க்கை! இப்படி ஒரு சோகமான பின்புலமா?

Report
978Shares

பிரபல நடிகை கங்கனா ரனவத் 15 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதாக தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற ஸ்டூடியோவின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றுள்ளது.

அதில், கங்கனாவின் சகோதரி ரகோலி சந்தல், அவர் மகன் பிரித்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கங்கனா சார்பில் அவரது டீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட்டில், தான் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார்.

நான் 15, 16 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். அந்த நட்சத்திரங்களை என் கைகளால் பிடித்துவிட முடியும் என்று உணர்ந்தேன்.

பிறகு சினிமாவுக்கு வந்தேன். ஒன்றரை, இரண்டு வருடம் போதைக்கு அடிமையாகி இருந்தேன்.

என் வாழ்க்கை குழப்பமாக இருந்தது. குறிப்பிட்ட வகை மக்களுடன் இருந்தேன். மரணம் மட்டுமே அவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றி இருக்க முடியும். நான் டீனேஜில் இருந்தபோது இதெல்லாம் நடந்தது.

அப்போது என் வாழ்வில் ஒரு நல்ல நண்பர் வந்தார். அவர் எனக்கு யோகாவை அறிமுகப்படுத்தினார். ராஜயோகா பற்றிய புத்தகத்தைக் கொடுத்தார்.

பிறகு சுவாமி விவேகானந்தரை என் குருவாக ஏற்றுக்கொண்டு என்னை நானே வளர்த்துக்கொண்டேன். அந்த சவாலான நேரங்கள் என் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால், நான் கூட்டத்தில் தொலைந்து போயிருப்பேன்.

ஆன்மிக வழிகாட்டுதல் இல்லாமல் என் மனோதிடத்தை வளர்த்துக் கொண்டிருக்க முடியாது. என் புத்தியையோ, திறமையையோ, உடல் அரோக்கியத்தையோ என்னால் வளர்த்திருக்க முடியாது. அதனால் நான் சொல்ல வருவது, இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கெட்ட நேரங்கள் மட்டுமே நல்ல நேரமாக இருக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார். இந்த காணொளியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

loading...