நடிகை தேவயானியா இது? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? இணையத்தில் கசிந்த புகைப்படம்

Report
1627Shares

நடிகை தேவயானி சிலம்ப பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்தியாவே முடங்கியிருக்கும் நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் வீடுகளில் இருந்து புதிய வேலைகளில் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அதற்கு நடிகை தேவயானியும் விதிவிலக்கு ஆகவில்லை. அந்தியூர் அருகே உள்ள ஆலயம் கரடு என்ற இடத்தில் தேவயானியின் கணவர் ராஜ்குமாருக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது.

அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி அனைவரும் தங்களுக்கு சொந்தமான இடங்களில் பொதுவெளியில் இருந்து விலகியுள்ளனர்.

தேவயானி மற்றும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் அவர்களுடன் தங்கியுள்ளனர்.

சத்யபாளையம் பகுதியை சேர்ந்த நவோபயா என்ற சிலம்ப பயிற்சியாளார், தேவயானி, அவர்களின் மகள்கள் இனியா மற்றும் பிரியங்கா ஆகிய மூவருக்கும் அவர்களின் பண்ணை வீட்டில் சிலம்பம் கற்றுத் தருகிறார்.

இது குறித்த புகைப்படமே இணையத்தில் உலாவி வருகின்றது.

loading...