சேதுராம் முதல் முரளி வரை.. தமிழ் சினிமாவையே உலுக்கிய நம்ப முடியாத 7 மரணங்கள்..!

Report
1453Shares

தமிழ் சினிமாவில் ஒருசில பிரபலங்களின் திடீர் மரணம் இன்றுவரை ஏற்றுகொள்ளமுடியாத, மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் இந்தாண்டு நிகழ்ந்த பிரபலங்களின் மரணமும், 10 வருடங்களுக்கு முன்பு இறந்த முரளி வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் மரணமும் ரசிகர்களை அதிர்ச்சியடைவே வைத்துள்ளது.

நடிகர் மற்றும் டாக்டர் சேதுராமன் 2020:

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் மூலம் 2013 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகரான தோல் மருத்துவர் சேதுராமன். இவர் கடந்த நாட்களுக்கு முன் இரவு 8.45 மணியளவில் திடீர் மாரடைப்பால் தனது 36 வயதில் உயிர் இழந்தார்.

நடிகர் விசு

தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.

1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பரவை முனியம்மா

நடிகை பரவை முனியம்மா, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்னைகளால் சிகிச்சை பெற்று வந்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறினார். அவரது சிகிச்சைக்கு, திரையுலகினர் பலரும் உதவினர்.

இந்நிலையில், மதுரையில் வசித்து வந்த பரவை முனியம்மா, கடும் மூச்சுத்திணறல் காரணமாக, கடந்த நாளில் அதிகாலை, வீட்டிலேயே காலமானார்.

JK ரித்தீஷ் - 2019:

அரசியல்வாதியும், நடிகருமான JK ரித்தீஷ், கடந்த ஆண்டு தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். 46 வயதான நடிகர் ரிதீஷின் திடீர் மாரடைப்பு மரணம் இன்று வரை நம்பமுடியாத சோக கதையாக உள்ளது. கடைசியாக LKG என்ற படத்தில் நடித்திருந்தார் JK ரித்தீஷ்.

ஸ்ரீதேவி - 2018:

தமிழ், ஹிந்தி என இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த திருமண விழா ஒன்றுக்கா சென்றிருந்தபோது தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் நீச்சல் தொட்டியில் உயிரிழந்து மீட்கப்பட்டார். தனது 54 வயதில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நா. முத்துக்குமார் - 2016:

பல்வேறு விருதுகள், தேசிய விருதுகள் வாங்கிய பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் திடீர் மரணம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறலாம். மஞ்சள் காமாலை காரணமாக தனது 41 வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.

முரளி - 2010:

90s கிட்ஸ்- ன் விருப்பமான நடிகர்களில் ஒருவர் முரளி. பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் முன்னணி தமிழ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனைக்கு சேர்வதற்கு முன்னதாகவே நடிகர் முரளி மாரடைப்பால் மரணமடைந்தார். முரளி இறக்கும்போது அவரது வயது 46.

loading...