ஊரடங்கு உத்தரவு!.. தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரபல நடிகை

Report
549Shares

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதையும் மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு பொலிசார் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் முதியவர்கள், தெருவோரங்களில் வசிப்பவர்களுக்கு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெருவோரங்களில் கிடக்கும் நாய்கள், பூனைகளுக்கும் உணவளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு வாரமாக நாய்கள் உணவு இல்லாமல் போராடி வருவதைக் கண்டு மனம் உடைகிறது. நான் உள்பட சிலர் சேர்ந்து தெருநாய்களை கண்டறிந்து உணவளித்து வருகிறோம்.

இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

loading...