மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Report
1540Shares

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தோல் மருத்துவரான சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி தமிழ் சினிமாவையே அதிர்ச்சியடைய வைத்திருந்தது.

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் 2013ம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சேதுராம் நடித்திருந்தார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து, வாலிப ராஜா, சக்கப் போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் சேதுராமன் நடித்தார்.

இந்நிலையில் அவரின் மரண செய்தி அவரின் குடும்பத்தினை மட்டும் அல்ல ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நடிகர் சேதுவின் இழப்பினை தாங்கி கொள்ள முடியாது தவிக்கும் குடும்பத்திற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.

இதேவேளை, நடிகர் சேதுவை இழந்த அவரின் அழகிய குழந்தையின் புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

#Sethu #Sethuraman 💔 #KollywoodCinima

A post shared by Kollywood Cinima (@kollywoodcinima) on

loading...