ஐயோ கடவுளே!.. இது வதந்தியாக இருக்கக்கூடாதா..? சேதுவுடன் நடித்த நடிகையின் உருக்கமான பதிவு

Report
996Shares

நடிகர் மற்றும் மருத்துவரான சேதுராமன் மறைவானது திரையுலகம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதிகம் பிரபலமில்லாத நடிகர் என்றாலும் சென்னையில் பெயர் பெற்ற மருத்துவர் மற்றும் இளம் வயது ஆனவர் என்பதால் அவருடைய மறைவானது அனைவருக்கும் சோகத்தினை ஏற்படுத்தியது.

இரவு 8:45 மணியளவில் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார் சேது. 36 வயதாகும் இவரது மரண செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை விசாகா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் "இது வெறும் வதந்தியான தகவலாக இருக்கக்கூடாதா... RIP சேது... கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இருந்து பல memories... இதை எழுதுவதில் எனக்கு பேரதிர்ச்சியாகவும், மிகுந்த வருத்தமாகவும் உள்ளது.

இந்த துயரத்தை சமாளிக்க கூடிய வலிமையை கடவுள் உங்கள் குடும்பத்தாருக்கு கொடுக்கட்டும்" என மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.