மகளுடன் நடிகர் சேது 'Bye' கூறிய காட்சி... பாசத்தை அள்ளிக்கொடுத்துட்டு இப்படியா தவிக்கவிட்டு செல்வது? ரசிகரின் குமுறல்!

Report
2776Shares

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனாக நடித்த சேதுராமனின் மறைவு ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு அவரது இறுதிச்சடங்கு நடந்து முடிந்தேறிய நிலையில், அவர் தனது குழந்தையுடன் இருந்த காணொளியினை அவதானித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் சேதுராமனுக்கு கடந்த 2016ம் ஆண்டு உமையால் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று சஹானா என்ற இரண்டு வயது குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கூட முடியாத நிலையில் இவ்வளவு அவசரமாக கடவுள் எடுத்துக்கொண்டாரே என்று பலரும் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தனது குழந்தையுடன் நேரத்தினை செலவிட்ட காட்சிகளை அவதானித்த ரசிகர் , இந்த உலகத்துல பாசம் காட்ட மறுப்பவங்க மத்தியில உங்க கொழந்தைக்கு அளவுகடந்த பாசத்த அள்ளி கொடுத்துட்டு இப்படி பாதீல தவிக்கவிட்டுட்டு பொய்ட்டீங்களே சகோ எவ்வளவு கனவோட இருந்திருப்பீங்க என்று மிகவும் வேதனையில் கருத்தினை பதிவிட்டுள்ளார்.

வேறு சிலர், இந்த பாப்பாவிற்காகவது கடவுளுக்கு கொஞ்ச கருணை இருந்திருக்கலாம்... பாப்பா தேடுனா அவளுக்கு சொல்லி கூட புரிய வைக்க முடியாது....கடவுளே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? கூறியுள்ளார். நடிகர் சேது தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்தவே வைத்துள்ளது.

loading...