திருமணம் நடந்து 4 வருடத்திலேயே இப்படி ஒரு இறப்பா?.. கதறிய நடிகர் சேதுராமனின் திரையுல நண்பர்கள்

Report
6639Shares

கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.

மருத்துவரான இவர் தமிழில் வெளியான வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சேதுராமன் சென்னையில் பிரபல தோல் மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.

மேலும், நடிகர் சேதுராமனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவரின் இறப்பை நம்பமுடியாத ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவரும் திருமணமாகி 4 வருடத்திலும், 35 வயதுக்குள் இப்படி இறப்பா? என கதறிய படி இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

249162 total views
loading...