வெளியே வராதீர்கள்.. ரொம்ப பயங்கரமாக இருக்கிறது.. கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்ட நடிகர் வடிவேலு

Report
403Shares

கொரோனா வைரஸ் ஆனது சீனாவில் ஆரம்பித்து, தற்போது இந்தியாவிலும் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 722-யை தொட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

எனவே 21- நாட்கள் வீட்டிலேயே இருக்கும்படி அரசும், பல திரைபிரபலங்களும் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், காமெடி நடிகர் வடிவேலுவும் கண்ணீர் மல்க பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது;

"மனசு வேதனையோடு, ரொம்ப துக்கத்தோடு சொல்றேன். தயவு பண்ணி எல்லாரும் அரசாங்கம் சொல்ற அந்த அறிவுரைப்படி, இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள். மருத்துவ உலகமே இன்றைக்கு மிரண்டு போய் கிடக்கிறது.

தன் உயிரைப் பணயம் வைத்து பலரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

காவல்துறையினர் நம்மைக் காவல் காத்து, பாதுகாப்பாக இருங்கள், தயவு பண்ணி வெளியே வராதீர்கள் என்று கூப்பிடும் அளவுக்கு இருக்கிறது.

யாருக்காகவோ இல்லையோ நம்ம சந்ததியினருக்காக, நம்ம வம்சாவளிக்காக, நம்ம உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். தயவு பண்ணி யாரும் வெளியே போகாதீர்கள். அசால்ட்டாக இருக்காதீர்கள். ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. தயவு பண்ணி வெளியே வராதீர்கள்” என உருக்கத்துடன் பேசியுள்ளார்.

15336 total views
loading...