பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவிய நடிகை ரோஜா

Report
169Shares

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பெரும் பதட்டத்தில் உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நகரி தொகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு ரோஜா சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளார். ஆனால் பிரசவம் பார்க்க அந்த ஆஸ்பத்திரியில் போதுமான வசதி இல்லை என்பதை அறிந்தார்.

அதனால் மேல்சிகிச்சைக்காக திருப்பதி மகளிர் ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்களும் தெரிவித்தனர். இதை கவனித்த ரோஜா பதறிபோய்விட்டார். உடனடியாக ஆம்புலன்ஸ் ஏதாவது வரவழைத்து பெண்ணை ஏற்றி செல்லுங்கள் என்றார்.

அதன்படியே ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. ஆனால் வந்து கொண்டிருந்த அந்த ஆம்புலன்சும் திடீரென நடுவழியில் பழுது ஏற்பட்டுள்ளது.

அதனால், அந்த பெண்ணை தன் காரிலேயே திருப்பதியில் உள்ள ஒரு பெண்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் ரோஜா.

ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ரோஜா சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளனர்.

6423 total views
loading...