எல்லோரையும் சாவடிக்காதீங்க.. காலில் விழுந்து கேட்கிறேன்.. அறிவுரை வழங்கி லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ!

Report
224Shares

கொரோனா வைரஸ் அச்சத்தல் மக்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளார்கள். பலரும் விழிப்புணர்வுடன் பல அறிவுரைகளையும் கூறி வருகிறார்கள்.

மேலும் சிலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, விராட் கோலி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தனுஷ், மாதவன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் விழிப்புணர் வீடியோக்களை வெளியிட்டனர்.

அதில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கை இல்லாத மாற்று திறனாளி ஒருவருடன் கொரோனா வைரஸ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வு கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் 20 நாட்கள் லீவு கிடைத்ததால் அப்பா, அம்மா பார்க்க ஊருக்கு கிளம்பும் ஒருவரை அழைத்து அட்வைஸ் கொடுக்கிறார். அவர் பேசியுள்ள முழு வீடியோ காட்சி இதோ..

9763 total views
loading...