நடுரோட்டில் கையெடுத்து கும்பிட்ட பொலிசார்... உங்க காலில் கூட விழுறேன்... வெளியே வராதீங்க

Report
365Shares

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது அனைத்து உலக நாடுகளை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது.

நேற்றை மாலை 6 மணியிலிருந்து ஏப்ரல் மாதம் 14ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு அதிரடியாக இந்த முடிவினை எடுத்துள்ளது.

இந்நிலையில் அதனையும் மீறி மக்கள் அவ்வப்போது வெளியே சென்று வருகின்றனர். சென்னையில் அவ்வாறு இருசக்கர வாகனங்களில் வெளியே வந்த பொதுமக்களை பொலிசார் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு... உங்க காலில் வேண்டுமானாலும் விழுறேன்... வெளியே வராதீங்க.. என்று இறுதியில் கண்ணீர் சிந்தி கதறியுள்ள காட்சி தீயாய் பரவி வருகின்றது. பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஆங்காங்கே காவல்துறையினர் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தாலும், மக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் செயல்படுவது வேதனையை அளிக்கின்றது.