கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் பிரகாஷ்ராஜ்! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

Report
2518Shares

கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய பணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்து உள்ளார்.

இதனால் இவருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்கும் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து விட்டேன்.

கொரோனா வைரஸ் காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தது அரை சம்பளத்தை தர தேவையான வழிமுறைகளை செய்து வருகிறேன்.

முடிந்த வரை நான் எல்லோருக்கும் உதவி செய்வேன். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நீங்களும் உங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள். அனைவரும் ஒன்றாக இருந்து இந்த கொரோனா வைரஸ் எனும் உயிர்க் கொள்ளியை எதிர்த்து போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பிரகாஷ்ராஜின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

loading...