தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன்!

Report
1774Shares

வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்பிய நடிகை சுருதிஹாசன் குடும்பத்தில் இருந்து அவரை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் பத்து நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்று தற்போது இந்தியா திரும்பி உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.

இந்த முடிவு கடினமாக இருந்தாலும் மக்கள் இதை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தான் வளர்க்கும் பூனை கிளாரா மற்றும் தம்முடன் இருப்பதாகவும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

இதேவேளை, நடிகை சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக விளக்கிக் கொண்டிருக்கும் கமலஹாசனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.